உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
வென்றி வேந்தன் விடுப்ப விரைவொடு
சென்றறி வான்போற் றேவியை
வணங்கிக்
கொற்றவற் றேடக் கோபமென் றொருத்தி
25 கைத்தலத் தமைப்பக் கானடுங்
கினன்போற்
குறையிவட் கென்னெனக் கோமக
ளறியா வார்ப்பொலி
கழற்கான் மன்னவ ருருவிற்
றூர்த்தக் கள்வன் பாற்போய்க்
கேளென |
|
(வயந்தகன் வாசவதத்தையைக் காணல்)
22 - 28 :
வென்றி..........கேளென |
|
(பொழிப்புரை) வெற்றியையுடைய அம்மன்னவன் மீண்டும்
தாமதியாமல் செல்க! என்று விடுத்தலாலே, அவ்வயந்தகன் விரைவோடு சென்று தேவியின்
மாளிகையின்கண் நிகழ்வதனை அப்பொழுதுதான் அறிபவன்போலத் தேவியை வணங்கி
'நம்பெருமான் இங்கு வந்துற்றனரோ?' என்று மன்னனைத் தேடுவானாய் வினவா நிற்ப,
அதுகண்டு ஆங்கு நின்ற பணிப் பெண்ணொருத்தி வயந்தகனை நோக்கி 'எம்பெருமாட்டி
சினந்துள்ளாள். ஆதலால் இப்பொழுது ஒன்றும் பேசாதே கொள்!' என்று கையினாலே
குறிப்பாகக் காட்டாநிற்ப; அதுகண்ட வயந்தகன் அங்குக் கட்டப்பட்டிருந்த மானனீகையைப்
பார்த்துத் தன் கால்கள் அச்சத்தால் நடுங்குவான்போல நடித்துக்கொண்டு 'அந்தோ!
இவளுக்கு உண்டாய குறைதான் யாதோ?' என்று பொதுவாக வினவா நிற்ப அதனை
அக்கோப்பெருந்தேவி அறிந்து வயந்தகனை நோக்கி 'வாரின்கண் பொலிவுற்ற வீரக்கழல்
கட்டிய காலையுடைய அரசர் வேடம் புனைந்த கயவனாகிய அக்கள்வன்பால் போய்க்
கேட்டறிந்து கொள்க! என்க. |
|
(விளக்கம்) வேந்தன் : உதயணன். கொற்றவன் : உதயணன். சினம் உடையவளாய் இருக்கின்றாளென்று
ஒருத்தி கையாற் காட்டி அமைப்ப என்க. கோமகள் : வாசவதத்தை. அறியா - அறிந்து. வார்
- வாரின்கட் பொலியும் கழல் என்க. மன்னவர் உருவினையுடைய தூர்த்தக் கள்வனென்க
என்றது உதயணனை. 29ஆம் எண்ணின்கண் நிற்றல் வேண்டிய ஓரடி முழுதும்
சிதைந்தொழிந்தது. |