பக்கம் எண் :

பக்கம் எண்:829

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          குறையிவட் குண்டேற் கேசங் குறைத்தற்
    30    கறிவேன் யானெனக் குறையெனக் கூறலும்
 
                 (வயந்தகன் கூறல்)
               29 - 30 : குறை.........கூறலும்
 
(பொழிப்புரை) தேவியின் இச்சினமொழிகேட்ட பின்னரும் அக்கொடுஞ்செயல் நிகழவொண்ணாமல் தடுத்தற்கு ஓர் உபாயத்தை மேற்கொண்டவனாய் வயந்தகன் 'அரசியே! கூந்தலைக் குறைத்தற்குரிய குற்றம் இவளுக்கு உண்டாயின் யானே இவள் கூந்தலைக் குறைத்தற்கு நன்கு அறிவேன். தேவியின் திருவுளக்கருத்தியாதோ' என வினவ அதுகேட்ட வாசவதத்தை 'அங்ஙனமாயின் இக்கயத்தியின் கூந்தலை நீயே குறைத்து விடுக' என்று கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) எம்பெருமாட்டி இவள் கூந்தலைக் குறைத்தற்கு ஏதுவாகிய குற்றம் இவள் செய்திருப்பாளேல் யானே அத்தண்டனையை இவட்குச் செய்வேன் என்பது கருத்து. குறை என்று தேவி கூறலும் என்க.