பக்கம் எண் :

பக்கம் எண்:83

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           இசைந்த வனப்பி னேயர் மகற்கும
           பசைந்த காதற் பதுமா பதிக்கும்
           யாப்புறு பால்வகை நீப்புற வின்றிப்
           பிறப்புவழிக் கேண்மையிற் சிறப்புவழி வந்த
     65    காமப் பெருங்கடல் கண்ணுறக் கலங்கி
           நிறைமதி யெல்லைத் துறையிகந் தூர்தர
 
           (இதுவுமது)
       61 - 66 : இசைந்த,,,,,,,,,ஊர்தர
 
(பொழிப்புரை) பொருந்திய பேரழகுடைய ஏயர்குலத் 
  தோன்றலாகிய உதயண குமரனுக்கும், அன்புற்ற காதலையுடைய
  பதுமாபதிக்கும் தொடர்புடைய ஊழ்வகை நீங்குதலின்றிப் பல
  பிறப்புக்களினும் பயின்று பயின்று அடிப்பட்டுவந்த
  கேண்மையுண்மையாலே சிறப்பு முறையாக வந்த இருவருடைய
  காமப் பண்பாகிய பெருங்கடலிரண்டும் பொங்கிக் கலந்து கலங்கி
  நிறையும் அறிவுமாகிய கரையையும் துறையையும் கடந்து பரவாநிற்ப
  என்க
 
(விளக்கம்) ஏயர்மகன் - உதயணன். பசைந்த - அன்புற்ற.
  யாப்பு-தொடர்பு, பால்வகை -ஊழ்வகை. .நீப்புறவு. - நீங்குதல்.
  பிறப்புவழிக் கேண்மை - பண்டும் பண்டும். பலப்பல பிறப்புக்களினும்
  பயின்றடிப்பட்டுவரும் பேரன்புடைமை. - உடுத்துவழிவந்த உழுவலன்பு
  என்றும், (1. 32 ; 42;) பிறப்பிடைக் கேண்மைப் பெருமனைக் கிழத்தி'
  என்றும்- (2 - 11 ; 39; 18 ;116) இவ்வாசிரியரே ஓதுதல் காண்க.
  நிறையாகிய எல்லையையும் மதியாகிய துறையையும் இகந்தென்க.