பக்கம் எண் :

பக்கம் எண்:833

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          ஆகிய துணரும் வாகை வேந்தன்
          யூகியை வருகெனக் கூவினன் கொண்டு
          புகுந்ததை யெல்லாங் கணந்தனிற் புகல
 
         (உதயணன் யூகியை வருவித்துக் கூறல்)
               57 - 59 : ஆகிய...........புகல
 
(பொழிப்புரை) இனி நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை நினைக்கின்ற வெற்றியையுடைய அரசன் யூகியை அழைத்துத் தனியிடத்தே கொண்டு ஆங்கு நிகழ்ந்ததையெல்லாம் நொடிப்பொழுதில் அவன்பாற் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) ஆகியது - நிகழ்ந்த செயல். அஃதாவது மானனீகை வாசவதத்தையால் ஒறுக்கப்படுதல். புகுந்ததை - நிகழ்ந்ததனை. கணம் - நொடிப்பொழுது.