| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 14. மணம் படு காதை |
| |
திகைப்ப வாயிழை கருத்தறிந் தனளாய்
அடிக ணெஞ்சிற் கடிகொண் டருளுமக்
கரும மெம்மொ டுரையா தென்னென
|
| |
(பதுமாபதி உதயணனை வினாவுதல்)
86 - 88 : ஆயிழை...........என்னென |
| |
| (பொழிப்புரை) அதுகண்ட பதுமாபதி அம்மன்னவன் கருத்தினைக் குறிப்பால் அறிந்தவளாய், " அடிகேள் ! தம்முடைய நெஞ்சின்கண் மிகுதல் கொண்டுள்ள அக்காரியத்தை அடிச்சிபாலும் கூறாதிருத்தற்குக் காரணம் என்னையோ" என்று வினவ என்க. |
| |
| (விளக்கம்) ஆயிழை : பதுமாபதி. குறிப்பால் அறிந்தனளாய் என்க. அடிகள் : முன்னிலைப் புறமொழி. கடிகொள்ளுதல் - மிகுதல். என் - என்ன காரணம்? |