உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
கோமகற் கவ்வயிற்
கோசலத் தவர்புகழ்க் 105 காவலன் றூதுவர்
கடைத்தலை
யாரெனக் கடைகாப்
பாளன் கைதொழு துரைப்ப
|
|
(கோசலத்தரசனுடைய தூதுவர் வருகையை வாயில்காவலன் உதயணனுக்குக்
கூறுதல்)
104 - 106 : கோமகன்............உரைப்ப
|
|
(பொழிப்புரை) அப்பொழுது கோசல நாட்டினரின் புகழ் மிக்க அரசனுடைய தூதுவர் வந்து நம் அரண்மனை
முற்றத்தின்கண் நிற்கின்றனர் என்று வாயில் காவலன் வந்து கைகூப்பித் தொழுது உதயண
மன்னனுக்குக் கூறா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) கோமகற்கு : உதயணனுக்கு. அவ்வயின் - அப்பொழுது.
அவ்விடத்தே எனினுமாம். காவலன் : கோசலமன்னன். கடைத்தலையார் - வாயிலிடத்தார்.
கடை - வாயில்.
|