| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 14. மணம் படு காதை |
| |
ஏயமற் றிதுவு மினிதென
வாங்கி ஏவற் சிலதியை யாவயிற்
கூஉய்த் தேவிகட் போக்கத்
திறத்துமுன் கொண்டு
|
| |
(உதயணன் அவ்வோலையை
வாசவதத்தைக்கு
விடுத்தல்)
112 - 114 : ஏய...........போக்க
|
| |
| (பொழிப்புரை) அவ்வோலைபெற்ற உதயணன் இச் செவ்வியில் ஏவப்பட்ட இவ் வோலையும் எனக்கு
இனிதேயாயிற்று என்று அதை வாங்கி அவ்விடத்தே நின்ற பணிமகள் ஒருத்தியை அழைத்து "இதை
நீ கொண்டு சென்று வாசவதத்தைக்குக் கொடுப்பாயாக !" என்று பணித்துப் போக்காநிற்ப
என்க.
|
| |
| (விளக்கம்) ஏயஇது - கோசலத்தரசன் ஏவிய இவ்வோலை.
வாசவதத்தையின் ஊடல் தீர்க்கும் வாயிலாகும் இஃது என்று கருதி இதுவும் இனிது என்றவாறு.
ஆவயின் - அப்பொழுது. அவ்வோலையைக் கொடுத்துப்போக்க
என்க.
|