பக்கம் எண் :

பக்கம் எண்:843

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
             தேவிகட் போக்கத் திறத்துமுன் கொண்டு
    115       பதுமா பதியைப் பருகென் றளிப்ப
             எதிரெழுந் தனளா யதுதான் வாங்கிக்
 
           (வாசவதத்தை ஓலைபெற்று ஓதுவித்தல்)
             114 - 116 : அத்திறத்து............வாங்கி
 
(பொழிப்புரை) அவ்வாற்றால் வாசவதத்தை அத்திருமந்திர ஓலையை முற்படக் கைக்கொண்டு தன் பக்கத்திலிருந்த பதுமாபதியை நோக்கி, "தங்காய்! இத்திருமந்திர ஓலையை நீ படித்துக் கூறுக" என்று கொடுப்ப அப்பதுமாபதி எழுந்து எதிர்சென்று அத்திருமந்திர ஓலையை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு என்க.
 
(விளக்கம்) போக்கு அத்திறத்து என்னும் நிலைமொழி வருமொழிகள் புணருங்கால் வருமொழி முதலாகிய அகரஉயிர் கெட்டது. அத்திறத்து - அவ்வாற்றால். பகருக - கூறுக. அது - அத்திருமந்திர ஓலையை.