உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
கோசலத் தரச னோலை
மங்கை
வாசவ தத்தை காண்கதன்
றங்கை
மாசின் மதிமுகத்து வாசவ தத்தை
120 பாசவற் படப்பைப் பாஞ்சா
லரசன்
சோர்விடம் பார்த்தென் னூரெறிந்
தவளுடன்
ஆயமுங் கொண்டு போயபின் பவனை
|
|
(ஓலையில்
எழுதப்பட்ட
செய்தி)
117 - 122 : கோசல...........பின்பு
|
|
(பொழிப்புரை) "கோசல நாட்டு அரசன் எழுதிவிடுத்த திருமந்திர ஓலை. இதனை நங்கையாகிய வாசவதத்தை
கண்டருளுக. கோப்பெருந்தேவியே ! களங்கமில்லாத திங்கள் மண்டிலம் போன்ற
முகத்தினையுடைய வாசவதத்தை என்பவள் நின் அருமைத் தங்கையாவாள். பசுமை நிறைந்த
தாழ்ந்த நிலத்தின்கண் தோட்டக் கூறுகளையுடைய பாஞ்சாலத்தின் மன்னனாகிய ஆருணி, யான்
சோர்வுற்றிருந்த செவ்வி பார்த்துப் படையோடு வந்து புகுந்து எனது நகரத்தைத் தாக்கி
அவ்வாசவதத்தையை அவள் தோழிமாரோடு சிறைபிடித்துக் கொண்டு போன பின்பு"
என்க.
|
|
(விளக்கம்) மங்கை என்றது பருவங்குறியாது நங்கை என்பதுபட
நின்றது மாசின் முகத்து வாசவதத்தை தன் தங்கை என மாறுக. அவ்வரசன் வாசவதத்தைக்குச்
சிற்றன்னை கணவனாகலின் தன் மகளை ஈண்டு வாசவதத்தையின் தங்கை என்று
குறிப்பிடுகின்றான். மானனீகையின் இயற்பெயர் வாசவதத்தை என்பதே ஆகும் என்று இதனால்
குறிப்பிடுகின்றான். பாசுஅவல் - பசிய பள்ளமாகிய நிலப்பரப்பு. படப்பை - தோட்டம்.
அரசன் : ஆருணி மன்னன். என்னூர் - என்னகரம். அவளுடன் - அந்த வாசவதத்தையோடு. ஆயம்
- தோழியர் கூட்டம். சிறைபிடித்துக்கொண்டு போன பின்பு
என்க.
|