உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
ஆயமுங் கொண்டு
போயபின் பவனை நேர்நின்
றனனாய் நெறிபடப்
பொருதுகொல் வத்தவர்
பெருமான் மங்கையர் பலருடன் 125 பற்றினன்
கொண்டு நற்பதிப்
பெயர்ந்து தனக்குந் தங்கை
யியற்பது மாபதி அவட்குங்
கூறிட் டளிப்பத் தன்பால்
இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்
|
|
(இதுவுமது)
122 - 128 : அவனை............கேட்டேன்
|
|
(பொழிப்புரை) "அந்த ஆருணி மன்னனை வத்தவ நாட்டு மன்னனாகிய நின் கணவன் எதிர்த்துநின்று அறநெறி
பிறழாமல் போர்செய்து கொன்று அவன் உவளகத்திலிருந்த மகளிர் பலரோடு அவ்
வாசவதத்தையையும் கவர்ந்துகொண்டு தன் மாளிகைக்குச் சென்று அம் மகளிர்களை இருகூறாக
வகுத்து, உனக்கு ஒரு கூறும் உன் தங்கையாகிய அழகுமிக்க பதுமாபதிக்கு ஒரு கூறுமாக வழங்க
அவ்விரு கூற்றில் அவ் வாசவதத்தை உன் கூற்றில் அகப்பட்டு நின்பால் வண்ணமகளாய்
இருந்ததனையும் யான் கேள்வியுற்றேன் !" என்க.
|
|
(விளக்கம்) அவனை - அவ்வாருணி மன்னனை. வத்தவர் பெருமான் :
உதயணன். மங்கையர் - ஆருணிமன்னன் உவளகத்திருந்த தோழிமார். நற்பதி - நல்ல
மாளிகை. தனக்கும் - உனக்கும். பதுமாபதியாகிய
அவளுக்கும்.
nbsp;
|