உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
பழுதின் றாக முழுவது
முணர்ந்து
வாசக முணரேன் வாசிமி
னடிகளென்
றாசி றவ்வை தன்கையிற் கொடுப்ப
|
|
(பதுமாபதி ஓலையை
வாசவதத்தையிடம்
கொடுத்தல்)
136 - 138 : பழுது............கொடுப்ப
|
|
(பொழிப்புரை) குற்றமின்றி முழுதும் நன்கு தனக்குள் ஓதி உணர்ந்து அச்செய்தியைத் தானே கூறத் துணியாமல்
"அடிகளே! யான் இவ்வோலையின் பொருளை உணர்கின்றிலேன். ஆதலின் தாங்களே ஓதி
உணர்ந்திடுக!" என்று கூறிக் குற்றமற்ற தமக்கையாகிய வாசவதத்தையின் கையிற்
கொடாநிற்ப" என்க.
|
|
(விளக்கம்) பழுது - ஓதுவோர் குறை. முழுவதும் - பொருள்
முழுவதையும். வாசகம் : ஆகுபெயர். அடிகள் வாசிமின் - அடிகளே ஓதிக்காண்மின். அடிகள் :
முன்னிலைப் புறமொழி. ஆசு - குற்றம். தவ்வை :
வாசவதத்தை.
|