உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
உலைப்பருந் தானை யுதயண
குமரற்
கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப்
பணைத்தோள்
உரிய வாயின வுணர்மி னென்றுதன்
80 அரிமதர் நெடுங்க ணயனின்
றோர்க்கும்
அறியக் கூறுத லமர்ந்தன
போல
நெறியிற் றிரியா நிமிர்ந்துசென் றாட |
|
பதுமாபதியின்
கண்கள் 77-82; உலைப்பரு.
..............சென்றாட |
|
(பொழிப்புரை) அவ்வழி,
பதுமாபதியின் செவ்வரிபரந்த மதர்த்த நெடிய கண்கள் பகைவராற்
குலைத்தற்கரிய படைகளையுடைய உதயண குமரனுக்கு இலையுங்கொழுந்தும் எழுதப்பட்ட
அழகிய வளையலணிந்த இவளுடைய பருத்த தோள்கள் உரியன வாயின;
இச்செய்தியை எல்லீரும் அறிந்துகொள்ளுங்கோள்! என்று அயலிலே
நின்றோரும் அறிந்து கொள்ளுமாறு கூறவிரும் பினபோன்று தமக்கியற்கையாகிய
நெறியினின்றும் பிறழ்ந்து நிமிர்ந்து இருமருங்கினும் சென்று சென்று
ஆடாநிற்ப என்க. |
|
(விளக்கம்) உலைப்பருந்தானை
பகைவராற் குலைத்தற் கியலாத ஆற்றலுடைய படை. இலையும்
கொழுந்துமாகத் தொய்யில் எழுதப்பட்.ட தோள் என்க. இலையுருவமும்
கொழுந்துருவமும்பட இயற்றிய வளையல் எனினுமாம். அமர்ந்தன
விரும்பின திரியா - திரிந்து. |