உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
செய்தது
பொறுவெனத் தெருளாள் கலங்கி
150 எழுதரு மழைக்க ணிரங்கிநீ
ருகுப்ப அழுகை
யாகுலங் கழுமின
ளழிய
விம்மி விம்மி வெய்துயிர்த்
தென்குறை
எம்முறை செய்தே னென்செய்
தேனென மாதர்க்
கண்ணீர் மஞ்சன மாட்டி 155 ஆதரத்
துடைந்தனள் பேதைகண்
டுடைத்துக்
கெழீஇய வவரைக் கிளந்துடன் போக்கித் |
|
(இதுவுமது) 149 -
156 : தெருளாள்............போக்கி |
|
(பொழிப்புரை) இன்னும் மனத்தெளிவு பெறாளாய்க் கலங்கி எழுதுதற்கரிய குளிர்ந்த தன் கண்கள் தான்
செய்த பிழைக்கு இரங்கி நீர் சொரியா நிற்ப, அழுகையும் துயரமும் நிரம்பியவளாய்
நெஞ்சழிய விம்மி விம்மி வெய்தாக மூச்செறிந்து "அந்தோ! இஃது என் குறையே! என்ன முறை
செய்தேன்? என்ன செய்து விட்டேன்?" என்று புலம்பி அழகிய தனது அன்புக் கண்ணீராலேயே
அம் மானனீகையை நீராட்டி அன்பாலே நெஞ்சுடைந்தவளாய் மானனீகையின் கண்ணீர் துடைத்துத்
தன்னைச் சூழ்ந்து நிற்கும் பணிமகளிரையெல்லாம் கட்டளையிட்டு அகற்றி
என்க. |
|
(விளக்கம்) எழுதரும் கண் - ஓவியத்தில் எழுதுதற்கியலாத
பேரழகுடைய கண் என்க. அழுகையும் ஆகுலமும் என்க. ஆகுலம் - துயரம். என் குறை - என்
குற்றமே. மாதர்க்கண் - அன்புநோக்குடைய கண். பேதை - மானனீகை. கெழீஇய அவரை -
தன்னைச் சூழ்ந்து நின்ற தோழிமாரை. கிளந்து - அகலப்போமின் என்று கூறி
என்க. |