பக்கம் எண் :

பக்கம் எண்:852

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          வரிநெடுந் தொடையல் வயந்தக னவ்வயின்
  165      விரைவிற் சென்று வேந்தற் குரைப்ப
 
          (வயந்தகன் உதயணனுக்குத் தெரிவித்தல்)
              164 - 165 : வரி...............உரைப்ப
 
(பொழிப்புரை) அப்பொழுது வரிந்துகட்டிய நெடிய பூந்தொடையலை அணிந்த வயந்தக குமரன் விரைந்து சென்று இந்நிகழ்ச்சிகளை உதயணனுக்குக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) வரி நெடுந் தொடையல் : வினைத்தொகை. வரிதல் - கட்டுதல். இனி வரிகளையுடைய தொடையல் எனினுமாம். தொடையல் - ஒருவகை மாலை.