உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
170 அதுநிகழ்
வேலையிற் புதுமண
மாதரை
வதுவைக் கோலம் பதுமை
புனைகென்
றங்கொரு சிலதியைச் செங்கோல்
வேந்தன்
தன்பான் மணநிலை சாற்றென் றுரைப்பப்
|
|
(உதயணன் மானனீகையை மணஞ்
செய்துகொள்ளல்)
170 - 173 : அது............உரைப்ப
|
|
(பொழிப்புரை) இங்ஙனம் நிகழுங்காலத்தே புதிய மணப் பெண்ணாகிய மானனீகைக்குத் திருமணக்கோலம்
செய்துவிடுக என்று வாசவதத்தை பதுமாபதிக்குக் கூறிப் பின்னர் அவ்விடத்தே நின்ற
பணிமகள் ஒருத்தியை நோக்கி, "ஏடி! நீ சென்று நம் செங்கோல் வேந்தன்பால் அவன்
மானனீகையைத் திருமணம் புரிதல் வேண்டும் என்னும் இந்த நிலைமையினை அறிவிப்பாயாக!"
என்று கூறிவிடுப்ப என்க.
|
|
(விளக்கம்) அது - அந்நிகழ்ச்சி. வேலை - பொழுது. புதுமண
மாதர் என்றது மானனீகையை. வதுவைக்கோலம் - மணக்கோலம். சிலதி - பணிமகள். நம்
பெருமான் தவறிலன் என்னும் நினைவால் செங்கோல் வேந்தன் என்றாள். சாற்று -
அறிவி.
|