உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
15. விரிசிகை வரவு குறித்தது |
|
நீயே
நிலமிசை நெடுமொழி நிறீஇ 25 வீயாச்
சிறப்பின் வியாதன் முதலாக்
கோடா துயர்ந்த குருகுலக்
குருசில் வாடா
நறுந்தார் வத்தவர் பெருமகன்
தேனார் மார்ப தெரியின்
யானே அந்தமில்
சிறப்பின் மந்தர வரசன்
|
|
(அம் முனிவன் கூற்று)
24 - 29
: நீயே............அரசன்
|
|
(பொழிப்புரை) வண்டுகள் ஆரவாரிக்கும் மார்பினையுடைய
மன்னனே ! நீ தானும் இந்நில உலகத்தின்மேல் பெரும் புகழை நிறுவிய அழியாத
சிறப்பினையுடைய ''வியாதன்'' என்னும் வேந்தன் முதல்வனாகக் கோணாது மேன்மேலும்
உயர்ந்துவந்த குருகுலத்தோன்றல்; வாடாத நறிய மாலையினையுடைய வத்தவ நாட்டினர் மன்னன்;
இனி ஆராயுங்கால் யானும் முடிவற்ற சிறப்பினையுடைய வித்தியாதர உலகத்துள்ள ஓர் அரசனே
காண்!' என்க.
|
|
(விளக்கம்) நெடுமொழி - புகழ். நிறீஇ - நிறுத்தி. வீயா - அழியாத. வியாதன் - குருகுலத்து முதல்
மன்னன். தேன் - வண்டு. தெரியின் - ஆராயின். அந்தம் - முடிவு. மந்தரவரசன் -
வித்தியாதர உலகத்துள்ள அரசன். இதனால் நீயும் யானும் சிறந்த அரச மரபினரே எனக் குல
ஒப்புமை கூறினா னாதல் உணர்க.
|