பக்கம் எண் :

பக்கம் எண்:864

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
         
    55    மறுநீங்கு சிறப்பிற் புண்ணியத் திங்கட்
          கணைபுரை கண்ணியைக் கவான்முத லிரீஇப்
          பிணையல் சூட்டினை பெருந்தகை மற்றிது
 
         (உதயணன் விரிசிகைக்கு மாலைசூட்டிய
                       செய்தியைக் கூறுதல்)
             55 - 57 : மறு............சூட்டினை
 
(பொழிப்புரை) ''களங்கம் நீங்கிய சிறப்பினையுடைய புண்ணியமுடைய திங்கள் மண்டிலத்தே வைக்கப்பட்ட இரண்டு அம்புகளை ஒத்த கண்களையுடைய என் மகளாகிய அவ்விரிசிகையை நீ நினது தொடையின்மேல் ஏற்றிவைத்து அவள் கூந்தலிலே மலர்சூட்டி விட்டனை அல்லையோ ?'' என்க.
 
(விளக்கம்) மறு - களங்கம். இனி, புண்ணியத் திங்களாகிய அப்பொழுது எனினுமாம். கவான் - தொடை. இரீஇ - இருத்தி. பிணையல் - மாலை. இது முற்காலத்தே உதயணன் விரிசிகையை மெய்தொட்டுப் பயின்றதனை நினைவுறுத்தியபடியாம்.