| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 15. விரிசிகை வரவு குறித்தது |
| |
மாதவ னுரைத்த வதுவை
மாற்றம் காவற்
றேவிக்குக் காவல னுணர்த்த |
| |
(விரிசிகையின்
வதுவையை வாசவதத்தைக்கு உணர்த்தல்)
81 - 82 :
மாதவன்............உணர்த்த |
| |
| (பொழிப்புரை) அதுகேட்ட அரசன் அத்துறவோன் கூறிய
திருமணச்செய்தியை நெஞ்சு காத்தலில் சிறந்த கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தைக்கு
உணர்த்தாநிற்ப என்க. |
| |
| (விளக்கம்) வதுவைமாற்றம் - திருமணம் பற்றிய செய்தி. தேவி : வாசவதத்தை. காவலன் -
உதயணன். |