உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
15. விரிசிகை வரவு குறித்தது |
|
மணிப்பூண் வனமுலை வாசவ
தத்தை பணித்தற்
கூடாள் பண்டே யறிதலின் 85 உவந்த
நெஞ்சமொடு நயந்திது நன்றென
|
|
(வாசவதத்தை
உடன்படல்) 83
- 85 : மணி............நன்றென
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட மணியணிகலனணிந்த அழகிய
கொங்கைகளையுடைய அவ்வாசவதத்தைதானும், முன்னரே அம்மன்னவன் அவ்விரிசிகையை
மெய்தொட்டுப் பயின்றதனை அறிந்திருத்தலாலே அம்மன்னவன் கூறிய அதற்கு ஊடாளாய்ப்
பெரிதும் மகிழ்ந்த நெஞ்சத்தோடு தானும் விரும்பி, ''பெருமானே! இக்காரியம் மிகவும்
நன்றேயாம்!'' என்று உடம்படாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) பணித்தற்கு - கூறியதற்கு என்பதுபட நின்றது. பண்டு உதயணன் மெய்தொட்டுப் பயின்ற
அம்முனிவன் மகளை அவன் மணத்தல் நல்லறமே என்பதுபற்றி வாசவதத்தை உவந்தாள் என்க.
அங்ஙனம் மணம் செய்யாதுவிடின் உதயணனுக்குப் பாவமும் பழியும் ஆகலின் அக்கற்புடைத் தேவி
அத்திருமணத்தைத் தானும் நயந்து இது நன்றென்றாள். இச்சிறப்புக்கருதி அப்பெருமகளை
அரிதிற்பெற்ற அவந்திகை என்று நூலாசிரியர்
பாராட்டுவர்.
|