உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
15. விரிசிகை வரவு குறித்தது |
|
தெருவிற் கொண்ட பெருவெண்
மாடத்துப்
பொற்பிரம்பு நிரைத்த நற்புற
நிலைச்சுவர் 105 மணிகிளர் பலகை
வாய்ப்புடை நிரைத்த
அணிநிலா முற்ற மயலிடை
விடாது மாத்தோய்
மகளிர் மாசில்
வரைப்பிற் பூத்தோய்
மாடமும் புலிமுக மாடமும்
கூத்தா டிடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும்
110 நாயின் மாடமு நகரநன்
புரிசையும் வாயின்
மாடமு மணிமண்
டபமும் ஏனைய
பிறவு மெழினகர்
விழவணி காணுந்
தன்மையர் காண்வர வேறிப் |
|
(இதுவுமது)
103 - 113 : தெருவில்............ஏறி |
|
(பொழிப்புரை) தெருவாக அமைந்த பெரிய வெண்சுதை
தீற்றப்பட்ட மாடத்தின்கண் பொன்னாலியன்ற பிரம்புகளை நிரல்படவமைத்த நல்ல
புறநிலைச் சுவரின்கண் மணி ஒளி கிளரும் பலகைகளை முகப்பின்கண் நிரல்பட வமைக்கப்பட்ட
அழகிய நிலாமுற்றத்தின் கண்ணும் அயலிடத்தும் இடைவெளியின்றி, மாந்தளிர் நிறமுடைய
மகளிர்களும் இன்னும் குற்றமற்ற இடமமைந்த பூத்தொழில் செய்யப்பெற்ற மாடங்களினும்
புலிமுக மாடங்களினும் கூத்தாட்டரங்கங்களினும் கொழுவிய சுதையையுடைய செய்குன்றங்களினும்
ஞாயின் மாடங்களினும் நகரத்தின் நல்ல மதில்களின்மேலும் கோபுரங்களினும் மணிதிகழ்
மண்டபங்களினும் இன்னோரன்ன பிற இடங்களினும் அழகிய அந்தக் கோசம்பி நகரத்தின்
மணவிழா ஒப்பனையைக் கண்டுகளிக்கும் கருத்துடையராய் அவற்றிற்கு மேலும் அழகுண்டாக
ஏறாநிற்ப என்க. |
|
(விளக்கம்) தெருவிற் கொண்ட - தெருவாக வமைந்த. பிரம்பு நிரைத்த நிலைச்சுவரையும் முகப்பின்கண்
மணிப்பலகையினையும் உடைய நிலாமுற்றத்தும் அயலும் என்க. மாத்தோய் மகளிர் -
மாந்தளிர் நிறமமைந்த மகளிர் என்க. பூத்தோய்மாடம் - பூத்தொழில் செய்த மாடம்.
புலிமுக மாடம் - புலி உருவம் அமைந்த முகப்பினையுடைய மாடம். குன்றம் - செய்குன்றம்.
நாயில் - ஞாயில் : போலி, புரிசை - மதில் வாயின்மாடம் - கோபுரம். நகர் -
கோசம்பிநகர். விழவணி - விழாவின்பொருட்டுச் செய்த ஒப்பனை. காண் - அழகு. ஏறி -
ஏற. |