உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
15. விரிசிகை வரவு குறித்தது |
|
பிடியும் சிவிகையும் பிறவும்
புகாஅள் 115 இடுமணல் வீதியு ளியங்குநள்
வருகெனப் பெருமக
னருளினன் பெறற்கரி தென்று
கழிபெருங்
காரிகை....................... .................................. .....................மொழிந்தழி
வோரும் சேரி
யிறந்து சென்று காணும் 120 நேரிழை மகளி
ரெல்லா நிலையெனப்
பேரிள மகளிரைப் பெருங்குறை
யாகக் கரப்பி
னுள்ளமொடு காத னல்கி
இரப்புள் ளுறுத்தல் விருப்புறு வோரும்
|
|
(இதுவுமது)
114 - 123 : பிடி............உறுவோரும்
|
|
(பொழிப்புரை) 'விரிசிகை நல்லாள் பிடியானையினாதல்
சிவிகையினாதல் பிற ஊர்திகளினாதல் ஏறாளாய்க் கொணர்ந்துபரப்பிய மணலையுடைய இந்நகர
வீதியின்கண் தன்காலாலேயே நடந்து வருவாளாக!' என்று நம்பெருமான் கட்டளை
இட்டிருக்கின்றனன் அங்ஙனம் வருதலால் அக்காட்சி பின் பெறற்கு அரிதாம் என்று மிகப்
பேரழகு.........கூறி நெஞ்சு அழிவாரும் தம் சேரியை விட்டுச் சென்று அவள் வரும்
வழியில் நின்று காண விரும்பும் நேரிய அணிகலனுடைய மகளிர் எல்லாம் தம் செவிலி முதலிய
பேரிளம் பெண்டிர் மெய்யென்று கருதும்படி அன்புமொழி பலவற்றைப் பேசி அம்மகளிர்
அறியாமல் மறைந்து சென்று விரிசிகையைக் காணும் கருத்தோடு வேறு சில காரியங்களைக்
காட்டி அவற்றின் பொருட்டுச் செல்ல விடை தருமாறு இரந்து விடைபெறும் விருப்பத்தை
யுடையோரும் என்க.
|
|
(விளக்கம்) நிலை - மெய்ம்மை. பெருங்குறை - இன்றியமையாக் காரியம். பேரிளமகளிர் - செவிலி
முதலியோர்.
|