பக்கம் எண் :

பக்கம் எண்:888

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
         மந்திர மகளிரிற் றோன்றிய மகளெனின்
         அந்தளிர்க் கோதை வாடிய திருநுதல்
         வேர்த்தது...........................
         ..............பெருமைப் பயத்தாற் பயந்த
  35     மாதவன் மகளே யாகுமிம் மாதர்
         உரையன்மி னிம்மொழி புரையா தென்மரும்
 
                      (இதுவுமது)
               31 - 36 : மந்திர...........என்மரும்
 
(பொழிப்புரை) "இவள் மந்திர தேவதையாகிய மகளிரின்கண் தோன்றிய தெய்வ மகள் என்றால் இவளுடைய அழகிய தளிர் விரவிய மாலைகள் வாடின. இவளுடைய அழகிய நுதல் வியர்த்துளது .........பெருமைமிக்க பயனால் துறவி ஈன்ற மகளே ஆவாள் இந்நங்கை. ஆதலின் இவளைத் தெய்வமகள் என்று கூறாதே கொண்மின்! அம்மொழி இவட்குப் பொருந்தாது", என்று கூறுவாரும் என்க.
 
(விளக்கம்) மந்திர மகளிரிற் றோன்றிய மகள் - மந்திர தேவதையாகிய மகளிர் வாயிலாய்த் தோன்றிய தெய்வமகள். தெய்வமகளிருக்கு மாலை வாடாமையும் நெற்றியில் வியர்வை அரும்பாமையும் இயல்பு. இவட்குக் கோதை வாடின. நுதல் வியர்த்தது ஆதலால் இவளைத் தெய்வமகள் எனல் பொருந்தாது என்றவாறு. இப் பகுதியில் 33ஆம் அடியின் இறுதிச்சீர் மூன்றும் 34ஆம் அடியின் முதற் சீரும் அழிந்தன.