உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
பலநா ணோற்ற பயனுண் டெனினே 110
வளமையும் வனப்பும் வண்மையுந்
திறலும்
இளமையும் விச்சையு மென்றிவை
பிறவும்
இன்பக் கிழமையு மன்பே
ருலகினுள்
யாவர்க் காயினு மடையு
மடையினும்
வார்கவுள் யானை வணக்குதற் கியைந்ந
115 வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவரிது
|
|
ஒரு மங்கை காமதேவனைப்
பாடிப் பரவுதல் 109 - 115 ;
பலநாள்.................பிறவரிது
|
|
(பொழிப்புரை) நிலைபெற்ற
இப்பேருலகத்தில் எத்தகையோர்க்கும் பற்பல நாள் நோன்புசெய்த பயன்
உண்டாயின் செல்வ வளமும் அழகும் வள்ளன்மைக் குணமும் ஆற்றலும் இளமையும்
வித்தையும் என்னும் இப்பேறுகளும் பிறவும் இன்பநுகரும் உரிமையும் உண்டாகும்.
அங்ஙனம் இப்பேறுகள் கிடைப்பினும் நெடிய கவுளையுடைய யானைகளை
வணங்கச் செய்தற்குரிய யாழ் வித்தையுடனே சிறந்த நற்குடியில் பிறத்தல்
மிகவும் அரிதாகும் என்க
|
|
(விளக்கம்) றல் - ஆற்றல்,
விச்சை - கலைகள். ''வகுத்தான் வகுத்த வகை யல்லாற்கோடி,
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'' (குறள். 377) என்பதுபற்றித்
துய்க்கும் உரிமையும் தவப்பயனின் விளைவே என்பார்,
இன்பக்கிழமையும் என்றர்- வார் நெடிய; . மதமொழுகும் எனினுமாம்.
விழுக்குடி-ஒழுக்கொடு புணர்ந்த உயர்குடி. பிறவு பிறத்தல் ''பிறவினோ
பிறவுமானான்''.எனவும், (தேவா-திருஞான-இடைமருது)"பிறாவாழிக் கரைகண்டாரே"
எனவும், (வில்லிபா - கிருட்டினன்-1) வருதல் காண்க.
|