உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
17. விரிசிகை வதுவை |
|
பரவை
மாக்கடற் பயங்கெழு ஞாலத் 50
துருவின் மிக்க வுதயணற்
சேர்ந்து போக
நுகர்தற்குப் புரையோர்
வகுத்த
சாபந் தீர்ந்து தானே
வந்த
கயக்கறு முள்ளத்துக் காமங்
கன்றிய
இயக்கி யிவளே யென்மக ளென்று
55 மாதவ முனிவன் மன்னற்கு
விடுத்தரல்
ஏத மாங்கொலிஃ தென்றுரைப் போரும் |
|
(இதுவுமது) 49 - 56 :
பரவை...........உரைப்போரும் |
|
(பொழிப்புரை) பரப்புடைய பெரிய கடலினால் பயன் பொருந்திய இந் நில வுலகத்தே அழகினால் மிகுந்த
உதயண மன்னனைச் சேர்ந்து இன்பம் நுகர்தற்பொருட்டுத் தனக்கு உயர்ந்தோர் இட்ட சாபந்
தீர்ந்து தானே விரும்பிவந்த கலக்கமில்லாத தன் நெஞ்சத்தே காம உணர்ச்சி முதிர்ந்த
ஓர் இயக்கியே இவள் ஆதல் வேண்டும். இவளைப் பெரிய தவத்தையுடைய முனிவனொருவன் என்
மகள் என்று சொல்லி நம் மன்னனுக்கு மனைவியாக விடுத்தல் குற்றமாம்," என்று கூறுவோரும்
என்க. |
|
(விளக்கம்) பரவை - பரப்பு. புரையோர் -
தவத்தாலுயர்ந்தோர். கயக்கு - கலக்கம். கன்றிய - முதிர்ந்த. இயக்கி - ஒருவகைத்
தெய்வப்பெண். விடுத்தரல் - விடுத்தல். ஏதம் - குற்றம். கொல் :
அசை. |