பக்கம் எண் :

பக்கம் எண்:896

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
          யாமே போலு மழகுடை யோமெனத்
          தாமே தம்மைத் தகைபா ராட்டி
          நாணிகந் தொரீஇய நாவுடைப் புடையோர்
          காணிக மற்றிவள் கழிவனப் பென்மரும்
 
                     (இதுவுமது)
             81 - 84 : யாமே........என்மரும்
 
(பொழிப்புரை) வேறு சிலர் "இவள் பக்கத்தே உள்ள மகளிருள் வைத்து யாமே பிற மகளிரினுங் காட்டில் பேரழகுடையேம் என்று கூறித் தம்மைத் தாமே அழகு காரணமாகப் பாராட்டிக் கொண்டு நாணத்தை விடுத்து அடக்கத்தையும் விட்ட நாவினையுடைய மகளிர் இவளுடைய பேரழகினைக் கண்கூடாகக் காண்பாராக!" என்று கூறுவோரும் என்க.
 
(விளக்கம்) தகை - அழகு. தனக்குரிய அடக்கத்தினின்றும் விலகிய நாவுடையராய் இவள் பக்கத்தில் நிற்கும் மகளிர் என்க. ஒரீஇ - ஒருவிய; விலகிய. காணிக : வினைத்திரி சொல். புடையோர் - பக்கத்திலுள்ளோர். கழிவனப்பு - பேரழகு.