உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
17. விரிசிகை வதுவை |
|
85 ஏதமி லொழுக்கின் மாதவ
ரிற்பிறந்
தெளிமை வகையி னொளிபெற
நயப்பப்
பிறநெறிப் படுதல் செல்லாள்
பெருமையின்
அறநெறி தானே யமர்ந்துகை
கொடுப்ப
அம்மை யணிந்த வணிநீர் மன்றல்
90 தம்முட் டாமே கூடி
யாங்கு
வனப்பிற் கொத்த வினத்தின
ளாகலின்
உவமமி லுருவி னுதயணன்
றனக்கே
தவமலி மாதர் தக்கன
ளென்மரும்
இன்னவை பிறவும் பன்முறை பகர
|
|
(இதுவுமது)
85 - 94 :
ஏதம்...........பகர
|
|
(பொழிப்புரை) "குற்றமில்லாத நல்லொழுக்கினையுடைய பெரிய தவத்தையுடையோர் பள்ளியிற் பிறந்து அப்
பிறப்பிற்கேற்ப எளிய வாழ்க்கையை மேற்கொண்டு பேரொளி பெறுதலாலே நம் பெருமான்
இவளைக் கண்டு விரும்பா நிற்ப, இவள் தானும் அவனுக்கே கற்புக்கடம் பூண்டு பிறரை மணம்
செய்து கொள்ளாளாக; அப் பெருமையினாலே அவ் வறவழிதானே விரும்பி இவட்குக் கை
கொடுப்பப் பற்பல பழம்பிறப்புக்களிலே அடிப்பட்டு வந்த அன்பு காரணமாக ஊழ்வினையே
கூட்டுவித்து அணி செய்த களவு மணத்தின்கண் இவர் கொடுப்பாரும் அடுப்பாரு மின்றித்
தம்முள் தாமே கூடினாற்போலவே இவள் நம் பெருமான் அழகிற்கு ஒத்த அழகுடையாள் ஆயினள்.
ஒப்பற்ற அழகுடைய நம்பெருமானுக்கு வாழ்க்கைத் துணையாகும் தவப்பயன் மிக்க இவள் அவனுக்கு
மிகவும் பொருத்தமுடையவளே!" என்று பாராட்டுவோரும் ஆகி, இவை போல்வன பிறவும் அம்
மாந்தர் தத்தமக்குத் தோன்றியவாறே பலகாலும் கூறாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) ஏதம் - குற்றம். உதயணன் நயப்ப என்க. பிற
நெறிப் படுதல் - பிறரை மணஞ் செய்து கோடல். அம்மை - பழம் பிறப்பு. அணிநீர்
மன்றல் - அழகிய நீர்மையுடைய களவு மணம். மாதர் : விரிசிகை. பன்முறை - பலவேறு
முறைகளாலும் எனினுமாம் : பகர - கூறாநிற்ப.
|