பக்கம் எண்:90
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 6. பதுமாபதியைக் கண்டது | |
விழுக்குடிப் பிறந்திவ் வீறோடு
விளங்கிய
வழுக்கா மரபின் வத்தவர்
பெருமகன்
உதயண குமரனொ டொப்போன்
மற்றிவள்
புதைபூண் வனமுலைப் போகம் பெறுகென
120 மரபறி மகடூஉப் பரவினள்
பாட அன்ன
னாக வென்னயந்
தோனெனப்
பொன்னிழை மாதர் தன்மனத்
திழைப்பத்
தலைநாட் டான மிலக்கணத் தியைந்தபின் | | (இதுவுமது) 116-123 ;
விழுக்குடி,.,,,,,,,,,,,,,,இயைந்தபின் | | (பொழிப்புரை) அத்தகைய
பேறுகளோடே சிறந்த குடியினும் பிறந்து வேறொருவர்க்கில்லாத சிறப்போடு
விளங்கிய தப்புதலில்லாத முறைமையினையுடைய வத்தவநாட்டு வேந்தனாகிய
உதயணகுமரனையே ஒத்தவனாகிய ஒரு நம்பி எங்கோமகளாகிய இப்
பதுமாபதியின் அணிகலன்களிலே புதைந்த அழகிய முலைப் போகத்தைப் பெறுக என்று
பாடும் மரபறிந்த தோழியொருத்தி காமதேவனை வேண்டிப் பாடிப்
பரவாநிற்பவும் அதுகேட்ட பதுமாபதி இற்றைநாள் என்னால் விரும்பப்பட்ட
அந்தத் தலைவன். அத்தகையோன் ஆகுக! என்று பொன்னணி கலனணிந்த
பதுமாபதி தன்னெஞ்சினுள்ளே ஊன்றி நினைப்பவும், அற்றை நாள் வழங்கும்
தலைநாட்டானம் அதற்குரிய இலக்கணத்தோடே வழங்கப்பட்ட பின்னர் என்க. | | (விளக்கம்) வீறு-
வேறொருவர்க்கில்லாத சிறப்பு. இவள்- பதுமாபதி. பூண்புதை வனமுலை என்க,
மரபு-பாடும்முறை. என்னயந் தோன்-என்னை நயந்தோன்; என்னால்
நயக்கப்பட்டோன் என இரு பொருளினும் மயங்கிற்று, மாதர்- பதுமாபதி,
மனத்திழைத்தல்- மனத்திலே ஊன்றிக் கருதுதல், |
|
|