பக்கம் எண் :

பக்கம் எண்:900

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
           றானை வேந்தன் றானெறி திரியான்
          பூவிரி கூந்தற் பொங்கிள வனமுலைத்
          தேவியர் மூவருந் தீமுன் னின்றவட்
  110      குரிய வாற்றி மரபறிந் தோம்பி
          அருவிலை நன்கல மமைவர வேற்றிக்
          குரவர் போலக் கூட்டுபு கொடுப்பக்
          கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின்
          வேட்டவட் புணர்ந்து வியனுல கேத்த
 
           (உதயணன் விரிசிகையை மணந்து இன்புறல்)
             107 - 114 : தானை.....................புணர்ந்து
 
(பொழிப்புரை) படைப் பெருக்கமுடைய உதயண மன்னன்றானும் சான்றோர் சென்ற நன்னெறியில் பிறழானாய்ப் பூக்கள் மலர்ந்த கூந்தலையும் பருத்த இளைய அழகிய முலையினையும் உடைய வாசவதத்தையும் பதுமாபதியும் மானனீகையும் ஆகிய தன் தேவிமார் மூவரும் மணவேள்வியின் முன்னின்று மரபறிந்து செய்தற்குரிய சடங்குகளைப் பேணிச் செய்து அவ்விரிசிகைக்கு அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைப் பொருத்த முண்டாகப் பூட்டி அவளுடைய தாயும் தந்தையும் போல அவள் கையினைப் பற்றி உதயணன் கையிற் சேர்த்துக் கொடுப்ப, சமித்துக்களைப் கூட்டுதலமைந்த திருமண வேள்வித் தீயின் முன்னிலையில் குறைவற்ற நூல்வழியாலே வதுவை செய்து அவளைக் கூடிய பின்னர் என்க.
 
(விளக்கம்) தானை - படை. வேந்தன் : உதயணன். உரிய - செய்தற்குரிய சடங்குகள். ஏற்றி - அணிந்து என்றவாறு. குரவர் - தாயும் தந்தையும். கூட்டுபு - கூட்டி. நெறிமை - நெறி. அவள் : விரிசிகையை.