பக்கம் எண் :

பக்கம் எண்:904

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
           ஏயமற் றிதுவு மினிதென வாங்கி
        ஏவற் சிலதியை யாவயிற் கூஉய்த்
        தேவிகட் போக்கத் திறத்துமுன் கொண்டு
 
           (உதயணன் அவ்வோலையை வாசவதத்தைக்கு விடுத்தல்)
                 112 - 114: ஏய...........போக்க
 
(பொழிப்புரை) அவ்வோலைபெற்ற உதயணன் இச் செவ்வியில் ஏவப்பட்ட இவ் வோலையும் எனக்கு இனிதேயாயிற்று என்று அதை வாங்கி அவ்விடத்தே நின்ற பணிமகள் ஒருத்தியை அழைத்து "இதை நீ கொண்டு சென்று வாசவதத்தைக்குக் கொடுப்பாயாக !" என்று பணித்துப் போக்காநிற்ப என்க.
 
(விளக்கம்) ஏயஇது - கோசலத்தரசன் ஏவிய இவ்வோலை. வாசவதத்தையின் ஊடல் தீர்க்கும் வாயிலாகும் இஃது என்று கருதி இதுவும் இனிது என்றவாறு. ஆவயின் - அப்பொழுது. அவ்வோலையைக் கொடுத்துப்போக்க என்க.