உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
இன்னவை
மற்றவ ரியற்கை முன்னோன்
பொலம்படு தீவிற்குக் கலந்தலைப்
பெயர்ந்துழிச்
சூழ்வளி சுழற்ற வாழ்கயத் தழுந்தினன்
25 அழுந்தின னென்பது கேட்டே
யறிவயர்ந்
தொழிந்த விருவரு முறுகடன் கழிப்பித்
|
|
(இதுவுமது) 22
- 26 : முன்னோன்.........கழிப்பி
|
|
(பொழிப்புரை) இம்மூவருள் வைத்து
முதல்வன் தன் இயல்பிற்கேற்பப் பொன் அகப்படும் தீவிற்குச் செல்லுதற்குக் கடலின்கண் மரக்கலமேறிச் செல்லும் பொழுது, கடலினூடே சூறைக்காற்றுத் தோன்றி
மரக்கலத்தைச் சுழற்றினமையாலே ஆழ்ந்த நீரின்கண் மூழ்கி இறந்தொழிந்தான். இங்ஙனம்
தமையன் கடலுள் மூழ்கி இறந்தொழிந்தான் என்னும் செய்தியைக் கேட்டலும், எஞ்சிய
தம்பிமார் இருவரும் மனமயங்கி வருந்தி இறந்தவனுக்குச் செய்தற்குரிய நீர்க்கடன்
முதலியவற்றைச் செய்து முடித்த பின் என்க.
|
|
(விளக்கம்) பொலம் - பொன். கலந்தலை - மரக்கலத்தில். சூழ்வளி!
சூறைக்காற்று. ஆழ்கயம் - கடல். ஒழிந்த இருவரும் - எஞ்சிய தம்பிமார் இருவரும். கடன்
- நீர்க்கடன் முதலியன. கழிப்பி - செய்து முடித்து.
|