பக்கம் எண் :

பக்கம் எண்:91

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
            மாயிரு ஞாலத்து மன்னவன் மகளே
     125    ஞாயிறு படாமற் கோயில் புகுதல்
           இன்றை நன்னாட் - கியல்புமற் றறிகெனத்
           தொன்றியன் மகளிர் தொழுதனர் கூறச்
 
        (பதுமாபதி அரண்மனை அடைதல்)
           124-127 ; மாயிறு,,,,,,,.,,,,,,,,கூற
 
(பொழிப்புரை) பழைய முறைமையையுணர்ந்த மகளிர் சிலர் 
  கோமகளைக் கைகூப்பித் தொழுது ''பெரிய நிலவுலகத்தை ஆளும்
  எங்கள் மன்னன் மகளே ! காமன் விழவின் முதனாளாகிய நல்ல
  இற்றை நாளிலே ஞாயிறு மறைதற்கு முன்பே அரண்மனை மகளிர்
  அரண்மனைக்குப் போதல் முன்னோர் முறைமையாகும்; இதனைத்
  திருவுள்ளம் பற்றுக!' என்று அறிவுறுத்த என்க.
 
(விளக்கம்) கோயில் - அரண்மனை. இன்றை நன்னாள்
  என்றது விழவின் முதனாளை. அரண்மனை மகளிர்க்கியல்பு என்க,
  தொன்றியல் மகளிர். பழைய முறைமையினை அறிந்த மகளிர்,