உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
அவையம்
போக்கி நவையறு நெஞ்சினன்
மக்க ளின்றெனின் மிக்குயர்
சிறப்பின்
என்குல மிடையறு மெனநினைந்
தாற்றான்
கொற்றத் தேவியைக் குறுகலு மவளும்
|
|
(உதயணன்
மகப்பேறு
விரும்பல்) 56
- 59 : அவையம்...........குறுகலும்
|
|
(பொழிப்புரை) அற்றைநாள்
அரசவையைக் கலைத்தபின்னர்க் குற்றமற்ற நெஞ்சினையுடைய உதயணமன்னன் நிகழ்ந்த
அவ்வழக்குக் காரணமாக 'அந்தோ ! எனக்கு மக்கள் பிறவாராயின் அரசர் குலத்தில்
வைத்து மிகமிக உயர்ந்த சிறப்பினையுடையதாய் வாராநின்ற எனது குருகுலம் இடையறவு
பட்டழியுமே' என்று நினைந்து அதனாலுற்ற துன்பத்தினை ஆற்றானாய் வெற்றிப்பாடமைந்த
வாசவதத்தையின் மாளிகையை அடையாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) அவையம் - அரசவை. நவை - குற்றம். என்குலம் - எனது குருகுலம்.
அந்நினைவால் உண்டான துன்பத்திற்கு ஆற்றானாய் என்றவாறு. முதற்றேவி என்பது தோன்ற
கொற்றத்தேவி என்றார்; என்றது வாசவதத்தையை.
|