உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
வேந்தனும் வினவியவள் வேட்கை
விரும்பித்
தாம்படு மாந்தர்க்குத் தண்ணீர் போலும்
75 காம்படு தோளியொடு கலந்துமகிழ்
வெய்திய
|
|
(உதயணன்
செயல்) 73
- 75 : வேந்தனும்.........எய்திய
|
|
(பொழிப்புரை) அம்மன்னவன்றானும்
அவள் சிந்தனையை வினவி அவள் விரும்புவதனைத் தானும் விரும்பி நீர் வேட்கை மிக்க
மாந்தருக்குத் தண்ணீர் எப்படியோ? அப்படிப் போலக் காமவேட்கையுடைய தனக்கு
இன்றியமையாதவளாகிய மூங்கில் போலும் தோளையுடைய அவ்வாசவதத்தை நல்லாளோடு கூடிக்
களித்த என்க.
|
|
(விளக்கம்) வேந்தன் : உதயணன். அவள் சிந்தனையை வினவி - அவள் வேட்கையைத்
தானும் விரும்பி என்க. தாம் - தாகம். காம்பு - மூங்கில். தோளி :
வாசவதத்தை.
|