பக்கம் எண் :

பக்கம் எண்:917

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
            துயிலிடை யாமத்துத் துளங்குபு தோன்றி
            அயில்வே னெடுங்கணோ ராயிழை யணுகி
            அருளு மெம்மிறை யெழுபுவி யளித்தற்குப்
            பொருளு மதுவே போதுக வென்றலின்
 
               (உதயணன் கனவு காண்டல்)
            76 - 79 : துயிலிடை.................என்றலின்
 
(பொழிப்புரை) இன்றுயில் கொள்ளா நின்ற நள்ளிரவின்கண் கூரிய வேல்போன்ற கண்ணையுடைய அழகிய அணிகலனையுடைய ஒரு பெண் அவன் கனவிலே நனவுபோல விளங்கித் தோன்றி அவனையணுகி, 'வேந்தே! எங்களரசன் உனக்கு ஏழு புவியையும் செங்கோலோச்சுதற்கு அருள்புரிவன். நீ விரும்பும் பொருளும் அதுவேயாகலின் என்னொடு வருக !' என்று அழைத்தலாலே என்க.
 
(விளக்கம்) துளங்குபு - விளங்கி. எனவே நனவுபோல என்றாயிற்று. எம்மிறை எழுபுவி அளித்தற்கு நினக்கு அருளும் என்க. பொருளும் - நீ விரும்பும் பொருளும்.