பக்கம் எண்:92
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 6. பதுமாபதியைக் கண்டது | | செய்வதை
யறியலள் வெய்துயிர்ப்
பளைஇத்
தெய்வத் தானம் புல்லென வையத்
130 திலங்கிழை மாத ரேற்ற
வேறிப்
பொலந்தொடி மகளிர் பொலிவொடு
சூழ வந்த
பொழுதிற் கதுமென
நோக்கிய
அந்த ணாளற் கணிநல
னொழியப்
பெருநகர் புகழத் திருநகர் புக்கபின் | | (இதுவுமது) 128-134 ;
செய்வதை,,,,,,,,,,,,புக்கபின் | | (பொழிப்புரை) அதுகேட்ட விளங்கிய
அணிகலன்களையுடைய பதுமாபதி தான்கண்ட காளை திறத்திலே தான் செய்தற்குரிய
செயல் யாதென்பதனை அறியாமல் திகைப்புற்று வெப்பமுடைய பெருமூச்செறிந்து
அக்காமதேவன் கோயிலினின்றும் புறப்பட்டு அவ்விடம் பொலிவற்றுப்
போம்படி வண்டியின்கண் தன் தோழிமார் ஏற்ற ஏறியருளிப்
பொன்வளையலணிந்த மகளிர் பொலிவோடு தன்னைச் சூழாநிற்பவும் தான்
வந்தபொழுது ஞெரேலென நோக்கிய பார்ப்பன மகனுடைய அழகும் நலமும்
அழிந்தொழியவும் பெரிய அவ்விராசகிரிய நகரத்து மக்கள் புகழாநிற்பவும்
அழகிய அரண்மனையை அடைந்த பின்னர் என்க, | | (விளக்கம்) தான் கண்ட
அந்தணன் திறத்திலே தான் செய்வதை அறியாளாய் என்க.
தெய்வத்தானம்-காமன் கோயில், பொலந் தொடி -பொற்றொடி.,
அந்தணாளன்-உதயணன். நகர்-ஆகு பெயர்.
திருநகர்-அரண்மனை |
|
|