உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
பின்னரப்
பூவின் பிக்க
நோக்கிப் பிறழ்ந்த
வாழியிற் பெருநடு
வாக உறழ்ந்துநனி
யழுத்திய வுறுபொன்
னல்லியின் ஒருமுடி
பிறழ்தலி னருமையொடு விரும்பிக் 100
கொண்டது வாவெனக் கோமகள்
கொண்டு வண்டவிழ்
நறுந்தார் வத்தவற்
கருளி நெடித்தனெ
னெழுகென விடுத்தனள் போகக்
|
|
(இதுவுமது) 96
- 102 : பின்னர்.........போக
|
|
(பொழிப்புரை) பின்னர் அந்த
மலரின் பக்கத்தே நோக்க அங்கு உருண்ட ஒரு சக்கரத்தின் நட்ட நடுவில் மாறிமாறி நன்கு
அழுத்தப்பட்ட பெரிய பொன்னிறமான ஓரகவிதழின்கண் ஒரு முடிக்கலன் பிறழ்தல் கண்டு
அருமையாக அக் கனாமகள் ''ஆ'' என்று வியந்து அதனைக் கைக்கொண்டு வண்டுகள் கிண்டி
அலர்த்தும் நறிய மாலையையுடைய உதயணனுக்கு அதனை வழங்கி 'ஐய ! இங்கு நும்மைக்
காலந்தாழ வைத்தேன். எழுவீராக !' என்று எழுந்து அவ்விருவரையும் நில வுலகத்திலே
விடுத்துச் செல்லாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) ஆழி - சக்கரம். சக்கரம் பொறிக்கப்பட்ட பொன்னல்லியின்மேல்
என்க. கோமகள் - அக் கனாமகள். நெடித்தனென் - காலந்தாழச் செய்தேன். நில
உலகினில் விடுத்துப் போக என்க.
|