உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
பல்கதிர்
மதியமொடு பரந்துவிசும் போடும்
வியந்த நற்கோ ளுயர்ந்துழி
நோக்கிப்
பெயர்ந்துவரு நாளிற் பெருமையின் வழாத
125 நன்னா ளமயத்து மின்னென
நுடங்கி விஞ்சைய
ராழி யுருட்டும் வேட்கையொ
|
|
(வாசவதத்தையின்
கருப்பம்) 122
- 126 : பல்கதிர்...........வேட்கையொடு
|
|
(பொழிப்புரை) பலவாகிய
கதிர்களையுடைய திங்கட்கோளோடு பரவி வானின்கண் இயங்குகின்ற கணிகளால்
வியக்கப்பட்ட பிற நல்ல கோள்கள் உயர்ந்த இடத்தை நோக்கிப் பெயர்ந்து வருகின்ற
நாளிலே பெருமையில் வழுவாத நல்ல முழுத்தத்தில் மின்னல்போன்று அசைந்து விச்சாதரர்
உலகின்கண் ஆணைச்சக்கர முருட்டுதற்குக் காரணமான விருப்பத்தோடே
என்க.
|
|
(விளக்கம்) மதியம் - திங்கள். நற்கோள் - நற்பண்புடைய கோள்மீன்கள்.
உயர்ந்துழி - உயர்ந்த இடம், என்றது ஆடு முதலிய இராசிகளுள் வைத்துச் சிறந்த இராசி
என்றவாறு. நன்னாள் அமையம் - நல்ல விண்மீன் நிலவிய
முழுத்தம்.
|