உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
135 இகலடு தானை யிறைமீக்
கூறிய
தவலரும் வென்றித் தருசகன்
றங்கை
கொங்கலர் கோதை நங்கைநம்
பெருமகள்
புகழ்தற் காகாப் பொருவில்
கோலத்துப்
பவழச் செவ்வாய்ப் பதுமா பதிதன்
140 கன்னி நோன்பின் கடைமுடி
விதனொடு
முன்னி முற்று மின்ன தீமென |
|
(பதுமாபதியின்
கட்டளை)
135-141; இகல்.,..........ஈமென |
|
(பொழிப்புரை) பகைவரைப்
.போரின்கண் வெல்லும் .ஆற்றலுடைய படைகளையுடையவனும் அரசர்களுள்
மேம்பட்டவன் என்று புகழப்பட்டவனும் தப்புதலில்லாத வெற்றியையுடையவனும்
ஆகிய நம் தருசகமன்னன் தங்கையும் மணம் விரிகின்ற மலர்மாலையை
உடையவளும் பெண்டிருட் சிறந்தவளும் நமக்கெல்லாம் பெருமாட்டியும்
புகழ்தற்கியலாத ஒப்பற்ற அழகினையும் பவழம்போன்று சிவந்த
திருவாயினையும் உடையவளாகிய பதுமாபதி தான் மேற்கொண்ட கன்னி நோன்பு
முடியுந்துணையும் முற்பட்டு இன்ன பொருளை வழங்காநிற்பள் என்று,
என்க, |
|
(விளக்கம்) இகல் - போர்.
இறைமீக் கூறிய-அரசர்களிலே மேம்படுத்துக் கூறிய. தவல்-தப்புதல்.
நங்கை-மகளிருள் தலை சிறந்தவன். பொருவில் - ஒப்பற்ற. முன்னி - முற்றும்
முன்னி என்க. முழுதும் முற்பட்டென்க. இன்னது-சாதியொருமை. ஈம்
, ஈவாள், |