உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
பெருமலை பிறவு
மருமையொடு புணர்ந்த 185 இறுவரை யேறி யிமையோ
ராடும் நறுமலர்ப்
பொய்கையு நந்தா வனமும்
உத்தர குருவினோ டொத்தவை
பிறவும் ஆண்டுபோந்
தெழுந்து காண்டலுற
விழையா ஐவகைச்
சோதிட ரணிபெறு கற்பம் 190 கைவைத் தொழியக்
கடந்துசென் றுப்பால்
அமரா பதியு மந்தரத்
தெல்லையும்
நுகர்பூங் காவு நோக்குபு
வருதற் குற்றதென்
மனனெனு முணர்வின ளாகி
|
|
(இதுவுமது) 184
- 193 : அருமையொடு............ஆகி
|
|
(பொழிப்புரை) காண்டற்கு
அருமையுடையனவாகத் தொடர்ந்துள்ள பெரிய மலையின்மேலேறி ஆங்குத் தேவர்கள் நீராடா
நின்ற நறிய மலர் நிரம்பிய பொய்கையும், அவர்கள் விளையாட்டயரும் பூம்பொழிலும்,
உத்தரகுருவினை ஒத்த பிற இடங்களும், பறந்து ஆங்காங்குச் சென்று காண்டற்கு விரும்புவதோடு
அமையாது, ஐந்து வகைப்பட்ட சோதிடதேவர் அழகு பெறுகின்ற கற்பலோகங்களும் சென்று
தொட்டு அவற்றினின்றும் கடந்துசென்று அப்பாலுள்ள அமராபதியும் அந்தரலோகமும் அவற்றின்
எல்லையும் ஆங்காங்குள்ள இன்பம் நுகர்தற்குரிய மலர் வனங்களும் ஆகிய
இவையிற்றையெல்லாம் கண்டு வருவதற்கு என்மனம் விரும்புகின்றது என்று தன் விருப்பத்தைத்
தானே அறிந்தவளாய் என்க.
|
|
(விளக்கம்) இறுவரை - பெரிய மலை. இமையோர் - தேவர்கள். நந்தாவனம் -
நந்தனவனம். உத்தரகுரு - உயிர்கள் முன்னர்ச்செய்த நல்வினைப் பயனாகிய இன்பங்களை
நுகர்ந்து கொண்டிருக்கும் ஒருவகை நிலம். ஆண்டாண்டு போந்து என்க. விழையா - விழைந்து.
ஐவகைச் சோதிடர் - சோதிடர். ஐவர்; சந்திரன், சூரியன், ஏனைக்கோள்கள் அசுவனி
முதலிய மீன்கள் ஏனைமீன்கள் என ஐந்து வகைப்பட்ட தேவர்கள். கைவைத்து என்பது தொட்டு
என்பதுபட நின்றது. இப்பால் - அப்பால். அமராபதி - இந்திரன் நகரம். அந்தரம் -
ஒருவகை மேலுலகம். இவை வாசவதத்தை தன்மனம் விரும்புவனவற்றைத் தானே ஆராய்ந்து
உணர்ந்தவாறு.
|