பக்கம் எண் :

பக்கம் எண்:932

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          மற்றுப்பிறர்க் குரையாண் மனத்தே யடக்கி
    195    ஈர்க்கொடு பிறந்த விளந்தளிர் போல
          மாக்கே ழாகமு மருங்குலும் வருந்த
          முலைக்கண் கறுப்பத் தலைக்கவி னெய்தி
 
                     (இதுவுமது)
              194 - 197 : மற்றுப்........எய்தி
 
(பொழிப்புரை) இவ்விருப்பத்தைப் பிறர்க்குக் கூற நாணித் தன் மனத்தின்கண் அடக்கி நரம்போடு தோன்றிய இளந்தளிர் போல மாமை நிறமுடைய தன்மெய்யும் இடையும் வருந்தா நிற்பவும் முலைக்கண்கள் கறுப்பவும் முதற்சூல் அழகுபெற்று என்க.
 
(விளக்கம்) தன் விருப்பம் நிறைவேற்றுதற்கு இயலாதனவாய் இருத்தலால் அதனைப் பிறர்க்குக் கூறவும் நாணி மனத்திலே அடக்கினள் என்பது கருத்து. ஈர்க்கு - நரம்பு. மாக்கேழ் - மாமை நிறம். மருங்குல் - இடை. தலைக்கவின் - தலைச்சூலால் உண்டாகும் புத்தழகு.