உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
நச்சுவனர் வரூஉ நான்மறை
யாளரை
அச்சங் கொள்ள வகற்றன்மி
னென்றுதன்
ஆணைவைத் தகன்றனள் யாண ரமைத்தவிஃ
145 தறிமி னீரெனப் பொறியமை
புதவிற் கடைமுதல்
வாயிற் கடுங்காப்
பிளையரை
அடைமுது மாக்க ளமைத்தகன் றமையிற்
|
|
(இதுவுமது) 142-147 ;
நச்சுவனர்............அகன்றமையின் |
|
(பொழிப்புரை) பதுமாபதியோடு வந்த
காஞ்சுகி முதியோர் பொறியமைந்த அரண்மனை வாயிலைக் கடிதிர்
காவல்புரிகின்ற மறவர்க்கு அறிவுறுத்து மேலும் தானம் பெறுதலை விரும்பி
வருகின்ற நான்கு மறைகளையும் ஓதியுணர்ந்த அந்தணர் அஞ்சும் படி போக்கா
தொழிமின் என்று நம் பதுமாபதி கட்டளையிட்டுச் சென்றனள்; புதுவதாக
விதித்த இக்கட்டளையையும் நீயிரெல்லாம் அறிந்தொழுகுமின்! என்றும்
அக்காவலரை அடக்கிப் போனமையாலே என்க. |
|
(விளக்கம்) நச்சுவனர் -
விரும்பியவர்- -ஆணை - கட்டளை. யாணர்-ஈண்டுப் புதிய கட்டளை என்னும்
பொருண்மேனின்றது. புதவு-கதவு, முதுமாக்கள் - காஞ்சுகி முதியோர்
|