உரை |
|
5. நரவாண காண்டம் |
|
2. இயக்கன் வந்தது |
|
வணங்கின னிருந்துழி மணங்கமழ் கோதை
கருத்தினை யெல்லாம் விரித்தவற்
குரைப்பப்
|
|
(உதயணன்
உ.ருமண்ணுவாவுக்கு
உரைத்தல்)
6 - 7 : மணங்கமழ்.............உரைப்ப
|
|
(பொழிப்புரை) உதயணமன்னன் நறுமணங்கமழும் மலர் மாலையணிந்த
வாசவதத்தையினது வயாவிருப்பத்தினை யெல்லாம் அவ்வமைச்சனுக்கு விரித்துக் கூறாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) கோதை : வாசவதத்தை. கருத்து - ஈண்டு விருப்பம். அவற்கு :
உருமண்ணுவாவுக்கு
|