உரை |
|
5. நரவாண காண்டம் |
|
2. இயக்கன் வந்தது |
|
யாவிர் மற்றுநீ ரசைவுபெரி துடையீர்
35 ஏக லாற்றீ ரென்னுற்
றீரென
................................................
........................போத
றேற்றாம்
தெய்வ மகனெனு மையுற
வகல அறிய
வேண்டி நெறிமையி னாடி
முன்னுப காரத்தின் முழுப்பய
னிகர்ப்பதோர் 40 பின்னுப
காரம் பெயர்த்தல்
விரும்பி
என்னருங் கருதா னிறந்த பின்னர்
|
|
(இதுவுமது)
34 - 41 : யாவிர்...........பின்னர்
|
|
(பொழிப்புரை) 'வேந்தே ! அவ் விளைஞன் நம்மை
நோக்கி ''ஐயன்மீர் ! நீவிர் யார் ? நீவிரோ மிகவும் நீர் வேட்கையால்
துன்புறுகின்றீர்; நடக்கமாட்டீராய் இங்குக் கிடக்கின்றீர். நீவிர்உற்ற இடர் யாது ?''
என்று.............போவதனை யாம் அறிந்துகொள்ள மாட்டேமாய் அவன் ஒரு தேவன் போலும்
என்று நமக்குண்டான ஐயம் தீரும்பொருட்டு அவனை யாரெனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு
முறையாக அறிந்து அவன் நமக்குச் செய்த முற்பட்ட உதவியினது முழுமையான பயனை ஒப்பதாகும்
ஒரு கைம்மாறு செய்தலை யாம் விரும்பவும், அவனோ நம்பால் எதனையும் எதிர்பாராதவனாய்
நம்பால் நின்றும் சிறிது தூரம்
சென்றபின்னர்'.............என்க.
|
|
(விளக்கம்) யாவிர் - யார். நீரசைவு - நீர்வேட்கைத் துன்பம். ஏகல் -
நடத்தல். என்னுற்றீர் - எவ்விடர் எய்தினீர். இப்பகுதியில் 35 ஆம் அடியை அடுத்த
ஓரடிமுழுதும் அதற்கும் அப்பாலுள்ள அடியில் செம்பாதியும் அழிந்தொழிந்தன. அழிந்த
இவற்றில் அவ்விளைஞன் அவர்களுக்கு நீர் ஊட்டி ஞெரேலெனச் செல்லத் தொடங்கினான்
என்னும் பொருள் இருந்ததாக ஊகிக்கக்கூடும். இன்னும் 41 ஆம் அடிக்கு அப்பால் ஓரடிமுழுதும்
அழிந்தொழிந்தது. அதன்கண் அவனை யாம் பின்தொடர்ந்து தகைத்து என்னும் பொருள்
இருந்திருத்தல் வேண்டும் என ஊகிக்கலாம். நெறிமை - நெறி. முன்னுபகாரம் -
செய்யாமற்செய்த உதவி. பின்னுபகாரம் - கைம்மாறு. விரும்ப - விரும்ப. என்னரும் -
எதனையும்.
|