உரை |
|
5. நரவாண காண்டம் |
|
2. இயக்கன் வந்தது |
|
நன்னர்
நெஞ்சத்து நயம்பா ராட்டி
எம்மி னாகா விடர்கண்
கூடின் உம்மை
யாமு நினைத்தன மொழுகுதும் 45
அன்ன மாண்பே மறிகபின் யாரென
உண்மை யுணரிய வொருங்குநாங்
குறைகொள
|
|
(இதுவுமது)
42 - 46 : நன்னர்.........குறைகொள
|
|
(பொழிப்புரை) பிறர்க்குதவும் நல்லறம் நிரம்பிய
அவனது நெஞ்சத்தினது சிறப்பினை யாம் பெரிதும் பாராட்டி ''ஐய! எங்களால் தீர்வுகாண
வியலாத இடர்கள் எமக்கு வரின் அப்பொழுது அவ்விடர் தீரும் பொருட்டு உம்மை யாங்கள்
நினைத்து நடப்பேம். யாங்கள் அங்ஙனம் உம்மைப் புகலிடமாகக் கொள்ளும் தன்மையுடையேம்
என்பதனை அறிந்து கொள்க!'' என்று பின் அவனை யாரென்று வினவி உண்மையை உணர்ந்து
கொள்ளும் பொருட்டு நாமெல்லாம் அவன் வரலாற்றினைக் கூறும்படி வேண்டா நிற்ப
என்க.
|
|
(விளக்கம்) நன்னர் - நன்மை. ஈண்டுப் பிறர்க்கு உதவும் அறமுடைமை.
அன்னமாண்பேம் - அத்தகையேம். உணரிய - உணரும்
பொருட்டு.
|