உரை |
|
5. நரவாண காண்டம் |
|
2. இயக்கன் வந்தது |
|
55 ஈதியன்
மந்திர மென்று கூறி
என்பெயர் நினைந்தா லெவ்விடத்
தாயினும்
துன்ப நீக்குவெ னென்றவன்
றந்த
மந்திர மறந்திலேன் மறங்கனல்
வேலோய்
வல்லை யாகி யொல்லை யவனைப்
60 பொழுதோடு நினையென வெழுதினன்
கொடுப்ப
|
|
(இதுவுமது)
55 - 60 : ஈதியன்........கொடுப்ப |
|
(பொழிப்புரை) 'பெருமானே ! அங்ஙனம் கூறியவன்
பின்னரும் ''இம்மந்திரம் நீயிர் என்னை நினைத்தற்கியன்ற மந்திரமாகும்'' என்று கூறி
மேலும் ''என் பெயரை நினைந்து இம்மந்திரத்தைக் கணித்தால் நீயிர் எவ்விடத்தே
கணிப்பினும் அவ்விடத்தே வந்து நீயிருற்ற துன்பத்தை நீக்குவேன்'' என்றும் கூறி அவன்
அப்பொழுது தந்த அம் மந்திரத்தை யான் மறந்திலேன். மறப்பண்பு கனலுகின்ற
வேலினையுடையோய் ! நீ நெஞ்சந் தளராது வன்மையுடையையாய் விரைந்து அந்த நஞ்சுகன்
என்னும் இயக்கனைக் காலமுண்டாகவே நினைப்பாயாக!' என்று கூறி அம்மந்திரத்தை ஓலையில்
எழுதிக் கொடுத்தலாலே என்க. |
|
(விளக்கம்) இயன்மந்திரம் : வினைத்தொகை. வல்லை - வன்மையுடையை.
ஒல்லை - விரைந்து. பொழுதொடு -
காலமுண்டாகவே. |