உரை |
|
5. நரவாண காண்டம் |
|
2. இயக்கன் வந்தது |
|
வடிவேன் மன்னனும் படிவமொ
டிருந்து
வாய்மையின் வழாஅத் தூய்மைய
னாகி
நினைப்பிற் றிரியா நெறிமையி
னோதி
இமைப்போன் கண்மிசை யிலங்கிய
வொளியொ
|
|
(உதயணன் இயக்கனை
நினைந்தது)
61 - 64 : வடிவேன்............கண்மிசை
|
|
(பொழிப்புரை) அம்மந்திரம் பெற்ற வடித்த வேலையுடைய
அவ்வுதயணமன்னனும் மனமொழி மெய்களையடக்கி நோன்போடிருந்து வாய்மையில் வழுவாத
தூய்மையுடையனாய் அவ்வியக்கனை நினைக்கும் அவ்வொரு நினைப்பினின்றும் பிறழாதவனாய்
முறைமையோடே அம்மந்திரத்தை ஓதிக் கண்ணிமைத்திருக்கும் அம்மன்னன் கண்முன்னே
என்க.
|
|
(விளக்கம்) வடிவேல் : வினைத்தொகை. படிவம் - நோன்பு. நெறிமை -
முறைமை. மந்திரங் கணிப்போர் கண்ணிமைத்திருந்து கணித்தல்
மரபு.
|