பக்கம் எண் :

பக்கம் எண்:949

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
           இமைப்போன் கண்மிசை யிலங்கிய வொளியொ
     65    டன்றவன் கண்ட யாக்கையுங் கோலமும்
           இன்றிவ ணுணரு மியல்பின னாகி
           நயப்புறு நெஞ்சமொடு நண்புமீக் கூரி
           இயக்க னவ்வழி யிழிந்தன னினிதென்.
 
                     (இயக்கன் வந்தது)
              64 - 68 : இலங்கிய............இனிதென்
 
(பொழிப்புரை) விளங்கிய ஒளியுடனே அற்றைநாள் அம் மன்னவன் கண்ட யாக்கையும் கோலமும் உடையனாய் இற்றை நாள் அவன் நன்கு உணர்ந்து கொள்ளும் தன்மை யுடையனாய் அவ்வுதயணனைப் பெரிதும் விரும்பும் நெஞ்சத்தோடு நட்புரிமையில் மிக்கு அவ்வியக்கன் அப்பொழுது வானினின்றும் இனிதாக இறங்கினன் என்க.
 
(விளக்கம்) இமைப்போன் கண்மிசை இழிந்தனன் என்க. உதயணன் தன்னை உணர்ந்துகொள்ளுதற் பொருட்டு அவன் முன்பு கண்ட யாக்கையும் கோலமும் உடையனாக இழிந்தனன் என்றவாறு. யாக்கை - உடம்பு. கோலம் - ஒப்பனை. மீக்கூரி - மிக்கு.

                    2. இயக்கன் வந்தது முற்றிற்று