உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
இயக்க
னவ்வழி யிழிந்தனன்
றோன்றி
மயக்கந் தீர்த்த மாசறு
நண்பின் அலகை
யாகிய வரச
குமரனை உலகுப
சாரத் துறைமுறை கழித்துக்
|
|
(உதயணன்
இயக்கனை
உபசரித்தல்)
1 - 4 : இயக்கன்............கழித்து
|
|
(பொழிப்புரை) இவ்வாறு உதயணன் தன்னை நினைந்துழி
வானினின்றும் இறங்கித் தன் மயக்கத்தைத் தீர்த்த குற்றமற்ற நண்பினையுடைய
அந்நஞ்சுகனை வரவேற்று உலகத்தவர் செய்யும் உபசார வகைகளை முறையே செய்து அளவளாவி
இருந்த பின்னர், உலகத்தின்கண் கோலோச்சும் மன்னருள் வைத்துத் தலைசிறந்த அரசனாகிய
உதயணனை அந்நஞ்சுகன் நோக்கி என்க.
|
|
(விளக்கம்) தோன்றி - தோன்ற. மயக்கந் தீர்த்த மாசறு நண்பின்
இயக்கனை உலகுபசாரத்துறைமுறை கழித்து எனவும் அவ் வியக்கன் அலகையாகிய அரசகுமரனை
நோக்கி எனவும் இப்பகுதியை ஏற்ற பெற்றி கொண்டு கூட்டியும் சில சொற் பெய்தும்
பொருளுரைத்துக் கொள்க. மயக்கம் தீர்த்த மாசறு நண்பு என்றது பண்டு உதயணன்
வேட்டையாடச் சென்று நீர்வேட்டு மயக்கமுற்றுக் கிடந்ததனை இந்நஞ்சுகன் தீர்த்தமையைக்
கருதிக் கூறியவாறு. மாசறு நண்பு என்றார், உறுவது சீர்தூக்கா நண்பாகலின். அலகை எடுத்துக்
காட்டு.
|