பக்கம் எண் :

பக்கம் எண்:953

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
          துயரந் தீர்க்குந் தோழனென் றென்னைப்
     20   பெயராக் கழலோய் பேணா யாகி
          ஒன்றிய செல்வமொ டுறுக ணில்லா
          இன்று நினைத்த தென்னெனப் படுமென
          வெஞ்சின வீரனை நெஞ்சுறக் கழறப்
 
                      (இதுவுமது)
               19 - 23 : துயரம்............கழற
 
(பொழிப்புரை) ''துன்பம் வந்தவிடத்து உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே அவ்விடுக்கணைத் தீர்க்கும் நண்பன் என்று என்னை நீ கருதி நினைந்தாயில்லை. பிறக்கடியிடாத கால்களையுடையோய்! பொருந்திய செல்வத்தோடே துன்பமொன்றும் இல்லாத இற்றை நாள் நீ என்னை நினைத்ததற்குக் காரணம் என்னையோ என்று வெவ்விய வெகுளியையுடைய வீரனாகிய அவ்வுதயணனை அந்நஞ்சுகன் நெஞ்சிற் படும்படி வினவாநிற்ப'' என்க.
 
(விளக்கம்) பேராக்கழல் - பிறக்கடியிடாத கால்கள். பேணாயாகி என்றது நினையாய் ஆகி என்றவாறு. உறுகண் - துன்பம். இடித்துரைத்தலாலே வினவ என்றொழியாது நெஞ்சுறக்கழற என்றார்.