உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
பட்டவை யெல்லா..................மெங்களின்
25 மாறடு வேலோய் மற்றவை
தீர்தலின்
எம்மிற் றீரா விடர்வரி
னல்லதை
நின்னை நினைத்த னீர்மைத்
தன்றென உள்ளிய
தில்லென வுள்ளங் குளிர்ப்பத்
தகுவன நாடி முகமன்
கூறி
|
|
(உதயணன்
கூற்று) 24
- 29 : பட்டவை.........கூறி |
|
(பொழிப்புரை) அது கேட்ட உதயணமன்னன் அந்நஞ்சுகனுக்கு
முகமன் மொழிபல கூறி ''அன்பனே! நின்னால் இங்குக் காட்டப்பட்ட இடர்களெல்லாம்
யாங்களே தீர்த்துக் கொள்ளும் இடர்களே; யாம் எம்மால் தீர்க்கவியலாத இடர்
வந்தால் உன்னை நினைப்பதல்லது இத்தகைய எளிய இடர்க்கெல்லாம் உன்னை யாங்கள்
நினைப்பது நின்பெருந்தன்மைக்கு ஒவ்வாது என்று கருதியே யாங்கள் அவ்வல்லற்
காலத்திலெல்லாம் உன்னை நினையாது விட்டேம்'' என்று அவன் இயல்புக்குத் தகும்
மொழிகளை ஆராய்ந்து கூறிப் பின்பு என்க. |
|
(விளக்கம்) பட்டவை - நிகழ்ந்த நிகழ்ச்சிகள். மாறு - பகைவர். அல்லதை
: ஐகாரம் சாரியை. |